"திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும்" - வைரலாகும் பீஸ்ட் பாடல் வரிகள்
#TamilCinema
Prasu
3 years ago

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 14 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கிவுள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. அறிவித்தபடி இன்று மாலை 6 மணியளவில் வெளியான திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் என்று தொடங்கும் பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



